2g. பிரானும், பிராட்டியும்

விண்ணில் தோன்றிய அன்னை தந்தையரை
விழுந்து வணங்கினர் முருகனும், தேவரும்.

மார்புறத் தழுவி மகிழ்ந்தார் பெருமான்;
மார்புறத் தழுவி உச்சி முகர்ந்தாள் உமை.

விண்ணுலகிலிருந்து இறங்கி வந்தது கீழே
மண்ணுலகிற்கு ஓர் அற்புத அரியணை.

இனிதே அமர்ந்தனர் பிரானும் தேவியும்;
இனிதே தொடங்கின திருமண நிகழ்சிகள்.

தெய்வயானையை அழைத்து வந்தனர் அங்கே.
தெய்வயானை வணங்கினாள் பெற்றோர்களை.

முருகனைக் கண்டதும் நாணினாள் அவள்.
முருகன் அருகே நின்றாள் புது மணப்பெண்.

முருகன் கையில் மகள் கையை வைத்து
விரும்பி தாரை வார்த்தனர் பெற்றோர்கள்.

பிரமன் எடுத்துத் தந்தார் திருத்தாலியை
பிரியத்துடன் அதை அணிவித்தார் முருகன்;

மங்கல வாத்தியங்கள் எங்கும் முழங்கின;
மங்கல வாழ்த்துக்கள் எங்கும் ஒலித்தன.

அனைவரும் மகிழ்ந்தனர் திருமணம் கண்டு;
அனைத்துச் சடங்குகளும்  முற்றுப் பெற்றன.

மணமக்கள் வணங்கினர் இனிய சபையை,
மணமக்கள் பெற்றனர் இனிய வாழ்த்துக்கள்.

அனைவரையும் வாழ்த்தி அருள் புரிந்தனர்
அன்னை தந்தையர் சென்றனர் பின் கயிலை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷிரமணி.

5#2g. Siva and Uma.

Siva and Uma appeared in the sky. Murugan and all the others prostrated to them. Siva and Uma embraced Murugan. A rare throne descended from the sky. Siva and Uma sat on it. The wedding ceremony was commenced.

The bride was bought to the wedding maNdapam. She paid respect to Siva and Uma. She blushed on seeing Murugan. Indra and IndrANi offered the hand of their daughter to Murugan. Brahma gave the mAngalyam which Murugan tied around DevayAni’s neck.

Auspicious blessings were showered on the couple and auspicious music was played. After blessing everyone gathered there, Siva and Uma left for Kailash.

Leave a comment

Leave a comment